தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பில், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும், 6வது ஊதிய குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி 100 சதவீதத்தையும் கடந்துவிட்டதால் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை
ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும், 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை ஜெயலலிதா அளித்தார். அதன்படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 25ம் தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பார்க்க முயன்றனர்.
அங்கு முதல்வரின் அலுவலகம் முன் 4 மணி நேரம் காத்து நின்றும், ஜேக்டோ கூட்டமைப்பின் 15 தலைவர்களை பார்க்க முதல்வர் மறுத்து விட்டார். இதனால் ஜேக்டோ நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதையடுத்து மார்ச் 8ம் தேதி (நாளை) திட்டமிட்டபடி அனைத்து மாவட்ட தலைநகர்களில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். ஜேக்டோ குழுவில் 27 ஆசிரியர் சங்கங்கள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.