தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையை இறுதி செய்வது உள்பட சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்பட்டு, பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன்படி, மார்ச் கடைசி வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நிதிநிலை அறிக்கையை இறுதி செய்யவும், அதிலுள்ள திட்டங்களுக்கு ஒப்புதலும் அளிக்கப்பட வேண்டும். இதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.