பன்றிகாய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1600ஐ தாண்டியது

நாடு முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1600ஐ தாண்டியது. இக்காய்ச்சலால் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும்  பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும்
இக்காய்ச்சலின் தாக்கம்  குறைந்தபாடில்லை. உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள்  அதிகரித்து கொண்டுதான் வருகிறது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு தற்போது  இக்காய்ச்சலின் அச்சுறுத்தல் அதிமாக உள்ளது. இந்தாண்டு தொடக்கம் முதல் நேற்று  முன்தினம் வரை நாடு முழுவதும் 1,627 பேர் இக்காய்ச்சலுக்கு  பலியாகியுள்ளனர். 28,441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில்தான் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 368 பேர் இறந்துள்ளனர். ராஜஸ்தானில் 367, மகாராஷ்டிராவில் 264, மத்திய பிரதேசத்தில்  221, தெலங்கான £வில் 69, கர்நாடகாவில் 65, பஞ்சாப்பில் 51, ஹரியானாவில் 44, உத்தர பிரதேசத்தில் 35, மேற்கு வங்கத்தில் 18, ஆந்திராவில் 18, டெல்லியில் 11,  ஜம்மு-காஷ்மீரில் 10 பேர்  உயிரிழந்துள்ளனர். பொதுவாகவே குளிர்காலத்தில்தான் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகம் இருக்கும். குளிர்காலம் முடிவடையும்  நிலையிலும் இக்காய்ச்சல் தொடர்கிறது. எனவே, பன்றி  காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தேவை. காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறி இருந்தால்  உடனே பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

சத்தான உணவுவகைகளை எடுத்துக்கொண்டால் இக்காய்ச்சலில் இருந்து தப்பித்து கொள்ளலாம். பன்றி காய்ச்சலை தடுக்க மத்திய சுகாதாரத்துறை பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து  வருகிறது. பன்றி காய்ச்சலுக்கான மருந்துகள் போதுமான அளவில் இருப்பதால் பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை என  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...