மாணவர்கள் சேராததால் வருமானம் இழப்பு தமிழகத்தில் 7 கல்லூரிகள் மூடல்

தமிழகத்தில் மாணவர் சேர்க்கை இல்லாததால் வருமானம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, 7 கல்லூரிகள் மூடப்படுகின்றன. இதற்காக அனுமதி கேட்டு அவை ஏஐசிடிஇக்கு கடிதம் எழுதி உள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு சில தினங்களுக்கு முன் தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம்
முழுவதும் 8.43 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகள் வரும் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை தங்கள் கல்லூரிக்கு இழுக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் தற்போது 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கு 2 லட்சத்து 11 ஆயிரம் இடங்கள் கிடைக்கும். இது தவிர கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு மூலம் 60 ஆயிரம் சீட்டுகள் கிடைக்கும். கடந்த ஆண்டு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 3ம் தேதி தொடங்கியது. ஜூன் 11ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. ஜூன் 16ம் தேதி ரேங்க் பட்டியலும், விளையாட்டு மற்றும் மாற்றுத்திறனாளிகள் கவுன்சலிங்கும் தொடங்கியது. இதை தொடர்ந்து, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது பிரிவு கவுன்சலிங் ஜூலை 7ம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளில் அண்ணா பல்கலைக்கழகம் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக, மாணவர் சேர்க்கைக்காக 2 லட்சம் விண்ணப்பங்கள் தயாரிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) இந்த ஆண்டு தமிழகத்தில் 9 புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கவும், 6 பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கவும், ஒரு எம்பிஏ வகுப்பு தொடங்கவும் அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதேபோல, 2 பார்மசி படிப்புகள் தொடங்கவும் விண்ணப்பம் வந்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு மாணவர்கள் சேராததால் வருமானம் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, தாங்கள் நடத்தி வந்த கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலையில் கல்லூரிகளை மூடுவதற்கும் அனுமதி கேட்டு கடிதம் வந்துள்ளன. அதன்படி, தமிழகத்தில் 5 பொறியியல் கல்லூரிகள், 2 பாலிடெக்னிக் கல்லூரிகளை மூடவும், பல்வேறு கல்லூரிகளில் 6 எம்பிஏ படிப்புகள், 4 எம்சிஏ படிப்புகளை நிறுத்தவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.
கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி கேட்டுள்ள பொறியியல் கல்லூரிகளில் பெரும்பான்மையானவை தென் மாவட்டத்தை சேர்ந்தவை என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு 5 புதிய பொறியியல் கல்லூரிகளை தொடங்க ஏஐசிடிஇ அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...