பிளஸ் 2 தேர்வு வியாழக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் மாணவர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வுகள் வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 2,377 தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வை தனித்தேர்வர்களாக 42,693 மாணவர்கள் எழுதுகின்றனர். காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
இந்தத் தேர்வு தொடர்பாக மாணவர்கள், பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும், சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரக் கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தேர்வு நாள்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட உள்ளன. இந்தக் கட்டுப்பாட்டு மையங்களை 8012594101, 8012594116, 8012594120, 8012594125 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தனியார் பள்ளிகள் எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடக் கூடாது என்பதற்காக முற்றிலும் பள்ளிக்கு வெளியிலிருந்து ஆசிரியர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பன்றிக் காய்ச்சலால் பாதிப்பில்லை: பிளஸ் 2 தேர்வு எழுதும் எந்த மாணவரும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் விபத்துகள், மருத்துவச் சிகிச்சைகள் காரணமாக தேர்வு எழுத முடியாதது தொடர்பாக தேர்வு அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிப்பார்கள். நிகழாண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு காரணங்களால் தேர்வுகளை முழுமையாகவோ அல்லது பகுதியளவோ எழுத இயலாது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், தங்களது மகன் அல்லது மகள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகக் கூறி இதுவரை எந்தப் பெற்றோரும் தேர்வு அலுவலர்களை அணுகவில்லை. எனவே, பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றார் அவர்.
சென்னையில் 53 ஆயிரம் பேர்: சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 144 தேர்வு மையங்களில் 53 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். புதுச்சேரியில் 33 தேர்வு மையங்களில் 14 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். புழல் சிறையில் 77 சிறைவாசிகள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.