குரூப் 2 தேர்வு ரிசல்ட் அடுத்த வாரம் வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 162 பணியிடத்தை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பரில் நடந்தது. தேர்வில் 6,561 பேர் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் அளித்துள்ள
தகுதிகள், விவரங்கள் ஆகியவற்றின் உண்மை தன்மையை அறியும் பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு 590 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரையும், 9ம் தேதி முதல் 11ம் தேதி வரையும் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பு பணி பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கியது. டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், இப்பணியை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உரிமையியல் நீதிபதி பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முதல் 2 நாட்களுக்கு தலா 120 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தினமும் 162 பேர் அழைக்கப்படுவார்கள். குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள தவறும் விண்ணப்பதாரருக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. அண்மையில் நடந்த குரூப் 2 தேர்வு (நேர்காணல் பதவி) ரிசல்ட் அடுத்த வாரம் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான (10.68 லட்சம் பேர் பங்கேற்றது) ரிசல்ட் இன்னும் ஒன்றரை மாதத்தில் வெளியிடப்படும். இந்தாண்டுக்கான குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...