தமிழகத்தில் வேலூர், சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை 103 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை காலை 8.30
மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், பல்வேறு மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த சில நாள்களாக நிலவி வரும் வறண்ட வானிலை காரணமாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக சேலம், வேலூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. அதே போல் திருச்சியில் 101, மதுரை, கரூர் பரமத்தியில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் நிலவியது.
மேலும் சென்னை, கோவை, பாளையங்கோட்டையில் தலா 98 டிகிரி வெப்பம் பதிவாகி இருக்கிறது.
தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் நாள்களுக்கு, பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகரின் குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை முறையே 73, 93 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.