சிஆர்சி) வகுப்பில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அதனை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக்கொள்ளலாம்

பள்ளி விடுமுறை நாள்களில் நடைபெறும் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய பயிற்சி (சிஆர்சி) வகுப்பில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அதனை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளது:

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையங்களில் செயல்வழிக் கற்றல் பயிற்சி (ஏபிஎல்) பெறும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், படைப்பாற்றல் கல்விப் பயிற்சி (ஏஎல்எம்) பயிற்சி பெறும் 6-8-ஆம் வகுப்பு ஆசிரியர்கள் ஓராண்டில் பயிற்சி பெறும் 10 நாள்களையும் 10 பணி நாள்களாகக் கருதலாம் என்றும், அந்த 10 நாள்களும் பள்ளிச் செயல்பட நிர்ணயிக்கப்பட்டுள்ள 220 பணிநாள்களுக்குள் அடங்கும் வகையில் அனுமதிக்கலாம் எனவும் ஆணையிடப்படுகிறது.

பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய பயிற்சிகளில் கலந்துகொள்ளும் தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும் திருத்தம் செய்யப்படுகிறது.

அதாவது இத்தகைய ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை ஆசிரியர் பணிக்கு குந்தகம் இல்லாமல் பணி நாள்களில் வழங்க கருதவேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பங்கேற்கும் நாள்கள் பணிநாள்களாக இருப்பின் பணி நாள்களாகவே கருதலாம்.

விடுமுறை நாள்களாக இருப்பின் 10 நாள்களுக்கு மிகாமல் அதனை ஈடுசெய் விடுப்பாக (சிறப்பு தற்செயல் விடுப்பு) அனுமதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...