வேளாண் துறை அதிகாரி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளது. இந்த வீட்டு வளாகத்துக்குள் ஆம் ஆத்மி கட்சியினர், சனிக்கிழமை பிற்பகல் திடீரென அத்துமீறி நுழைந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் அவர்களைத் தடுக்க முயன்றனர். இதனால்,அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வரின் வீட்டு வளாகத்துக்குள் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களையும் மீறி உள்ளே நுழைந்து முதல்வரின் வீட்டின் முன் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முதல்வர் வீட்டில் இல்லை.
இதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களை முதல்வர் வீட்டு வளாகத்தை விட்டு போலீஸார் வெளியேற்றி, அனைவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஆர்வார்ப்பேட்டையில் உள்ள எத்திராஜ் திருமண கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் நேற்று இரவு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் 50 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வரின் வீடு அமைந்துள்ள பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்