ஓசூரில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கான கணித வினாத்தாள் வெளியான விவகாரத்தில் உரிய உத்தரவு இல்லாமல் இரு ஆசிரியர்கள் கண்காணிப்பாளராக தேர்வு அறைக்கு சென்று முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விளக்கும் அளிக்கும்படி மாவட்ட கல்வி
அலுவவலரான வேதக்கண் தண்ராஜ்க்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதற்கு வேதக்கண் தன்ராஜ் அளித்துள்ள விளக்கத்தில் தேர்வு நடந்த பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் அறை கண்காணிப்பாளராக பணியாற்றிய மகேந்திரன் மற்றம் கோவிந்தன் ஆகிய இரு ஆசிரியர்களும் முறைப்படி உத்தரவு பெறாமல் பணி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உரிய உத்தரவு இல்லாமல் தேர்வு கண்காணிப்பாளராக இருவர் பணியாற்றியது குறித்து சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தின் பொறுப்பாளரிடம் மாவட்ட கல்வி அலுவர் விசாரணை நடத்தியதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவை ஏற்று மகேந்திரன் மற்றும் கோவிந்தனை அறை கண்காணிப்பாளராக அனுமதித்தது தெரியவந்துள்ளது.
இதனால் இந்த விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடம் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.