பல்வேறு மாநிலங்களில் அரசு
பொதுத்தேர்வு துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் பீகாரில் அனைவரும் வெட்கி தலை குனியும் அளவிற்கு பெரும் தேர்வு முறைகேடு நடந்துள்ளது. ஆயிரக்கணக்கான மையங்களில் தேர்வு நடந்து கொண்டிருந்த போது பெற்றோர்கள், மாணவர்களின் உறவினர்கள் தேர்வு மையம் அருகே வந்தனர். மேற்கூரையில் உள்ள இடைவெளி வழியாக நுழைந்து தயாராக வைத்திருந்த பிட்டுகளை மாணவர்கள் நோக்கி போட்டனர். மாணவர்கள் அதனை எடுத்து காப்பி அடித்தனர்.
இந்த சம்பவம் லோக்கல் டி. வி., மீடியாக்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த லைவ் காட்சிகள் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் ஷாகி பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளார். இது போன்ற தவறுகளை எல்லாம் கட்டுப்படுத்த அரசால் முடியாது. பெற்றோர்களும், மாணவர்களும் பார்த்து திருந்தினால் தான் இதனை மாற்ற முடியும் என பதில் அளித்து ஒதுங்கி கொண்டார்.
