பத்தாம் வகுப்பு மாணவர்கள் பாடங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் !

10ம் வகுப்பு மாதிரி வினாவிடை இணையதளத்தில் வெளியீடு
பதிவு செய்த நாள்: மார் 05,2015 10:45
எழுத்தின் அளவு:  
பெங்களூரு: ”பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, தமிழ் உட்பட அனைத்து பாடங்களுக்குமான மாதிரி வினா விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது,” என, கர்நாடக கல்வி இயக்குனரக உருது மற்றும் பிற சிறுபான்மை மொழிகளின் இயக்குனர் தெரிவித்தார்.


பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில், கர்நாடக மாநில தமிழாசிரியர்கள் கருத்தரங்கம், காமராஜர் பள்ளியில் நடந்தது. தமிழ் சங்க தலைவர் தாமோதரன் பேசுகையில், ‘காமராஜர் பள்ளி அமைந்துள்ள பகுதிகளில், தொடர்ந்து செயல்பட இயலாமலுள்ள துவக்க பள்ளிகளை தமிழ் சங்கமே எடுத்து நடத்தவும் தயாராக உள்ளது,” என்றார்.

கர்நாடக கல்வி இயக்குனரகத்தின் உருது மற்றும் பிற சிறுபான்மை மொழிகளின் இயக்குனர் ஜோரா ஐடீன் பேசியதாவது: இந்தாண்டு, 10ம் வகுப்பு தமிழ் தேர்வுக்கு செல்லும் அனைத்து சிறுபான்மை மொழி மாணவ, மாணவியருக்கும் பயன்படும் வகையில், தமிழ் உட்பட அனைத்து பாடங்களுக்குமான மாதிரி வினா விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் பள்ளிகள் இதை பதிவிறக்கம் செய்து, மாணவ, மாணவியருக்கு பயன்படும் வகையில் செயலாக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...