ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவி தொகை உயர்வு !

ஆதிதிராவிட ஆய்வு மாணவர்களுக்கான, ராஜிவ் காந்தி தேசிய கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்த, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவிப்பு:



சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின், பிப்., 24ம் தேதி கடிதப்படி, ராஜிவ்காந்தி தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், ஆதிதிராவிட ஆய்வு மாணவர்களுக்கான உதவித்தொகை, 2014 டிச., 1ம் தேதியிட்டு உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி, இளநிலை ஆய்வாளர்களுக்கு (ஜே.ஆர்.எப்.,), இரு ஆண்டுகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்பட்ட, 16 ஆயிரம் ரூபாய், 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

மூத்த ஆய்வாளர்களுக்கு ( எஸ்.ஆர்.எப்.,), மீதமுள்ள ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட, 18 ஆயிரம் ரூபாய், 28 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், தற்போது, ஆய்வு உதவித்தொகை பெறும் காலம், அதிகபட்சமாக, ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...