"ஆர்வம் இருந்தால் இன்றைய இளைஞர்கள் கணிதத் துறையில் சாதிக்கலாம்"

ஆர்வம் இருந்தால் இன்றைய இளைஞர்கள் கணிதத் துறையில் சாதிக்கலாம்" என்று பெங்களூரு இந்திய புள்ளியியல் மையத் தலைவர் நரசிம்ம சாஸ்திரி தெரிவித்தார்.

மதுரை தியாகராஜர் கல்லுாரி கணிதத் துறை சார்பில் துாய மற்றும் அடிப்படை கணிதத்தில் எழுச்சியடையும்
துறைகளின் வளர்ச்சி என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. முடிவுறு குலங்கள் மற்றும் வடிவங்கள் என்ற தலைப்பில் அவர் பேசுகையில், "கணிதத்தில் குலங்கள் மூலம் பல்வேறு சிக்கலான சமன்பாடுகளுக்கும் தீர்வு காணலாம். இத்துறையில் இளம் தலைமுறையினருக்கு ஆர்வம் ஏற்பட்டால் சாதிக்கலாம். உள் மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன" என்றார்.

கணிதம் சார்ந்த பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர்கள் ராஜன், தீபக், சத்தியஜித்ராய், தமிழ்ச்செல்வன் பேசினர். மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் ராஜசேகர் நிறைவுரையாற்றினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...