பள்ளி மதில்சுவர் இடிந்து விழுந்து, ஐந்தாம் வகுப்பு மாணவன் இறந்தார்; இருவர் காயமடைந்தனர். கிராம மக்கள், பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வட அகரம் கிராம ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தம், 10 மாணவர்களே படிக்கின்றனர். கடந்த 2011ம் ஆண்டு, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அப்போதைய
பள்ளி தலைமை ஆசிரியை திலகவதி, நுழைவு வாயில் மதில்சுவரை, இரும்பு கேட்டுடன் கட்டினார்.
நேற்று காலை 9:00 மணியளவில், மாணவர்கள் ஆறு பேர், பள்ளி கேட்டை திறந்தபோது, மதில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி, ஐந்தாம் வகுப்பு மாணவன் கார்த்திக், 10, இறந்தார். மேலும், 9 வயது மாணவர் இருவர் காயமடைந்தனர். மதில்சுவர் கட்டிய தலைமை ஆசிரியையை கைது செய்ய வேண்டும்; மாணவன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி, கிராமத்தினர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
அங்கு வந்த தலைமை ஆசிரியை சிவசங்கரியை தாக்க முயன்றனர். ஆட்சியர் நேரில் வர வேண்டும். இல்லையேல், இ.சி.ஆர்., சாலையில் மறியல் செய்வோம் என, மக்கள் மறியலுக்கு சென்றனர். முதல்வர் நிவாரண நிதியிலிருந்து, பலியான மாணவன் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும். மாணவனின் தாய் விதவை என்பதால், அரசு பணி வழங்க ஆவன செய்யப்படும். பணி கிடைக்கும் வரை, முதியோர் பென்ஷன் வழங்கப்படும்.
இலவச வீட்டுமனை பட்டா, பசுமை வீடும், மாணவனின் தம்பிக்கு இலவச உயர் கல்வி வழங்கப்படும் என, முதல்வர் அலுவலகத்தில் பேசிய பின் ஆட்சியர் கூறியதாக, தாசில்தார் கூறினார். ஆட்சியரின் உறுதிமொழியை ஏற்ற கிராம மக்கள், உடலை அடக்கம் செய்ய சம்மதித்தனர்