குழந்தைகளுக்கான புதிய காப்பீட்டு திட்டத்தை எல்.ஐ.சி. அறிமுகம் செய்துள்ளது.எல்.ஐ.சி.(இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம்) தென் மண்டல மேலாளர் த.சித்தார்த்தன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எல்.ஐ.சி. தென்மண்டலம் தனி நபர் காப்பீட்டின்
அடிப்படையில் கடந்த மாதம்(பிப்ரவரி) 28–ந்தேதி வரை 16.69 லட்சம் பாலிசிகளை முடித்து, பிரீமிய வருமானமாக ரூ.2,528 கோடி பெற்றுள்ளது.
பிரீமிய வருமான அடிப்படையில் சென்னை கோட்டம் ரூ.301 கோடி பெற்று மண்டல அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. பென்ஷன் மற்றும் குழுக்காப்பீட்டு வணிகத்தில் 52.34 லட்சம் நபர்களுக்கு காப்பீடு அளித்து, 5,413 திட்டங்களில் ரூ.2,757.51 கோடி பிரீமியமாக பெறப்பட்டுள்ளது.
ஜீவன் சங்கம்
காப்பீட்டு ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்தின் (ஐ.ஆர்.டி.ஏ.) அறிவுறுத்தலின்படி, 17 புதிய திட்டங்களை ஏற்கனவே எல்.ஐ.சி. அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஜீவன் சங்கம் மற்றும் குழந்தைகளுக்கான புதிய மணிபேக் திட்டம் ஆகிய 2 திட்டங்களை எல்.ஐ.சி. இன்று(நேற்று) அறிமுகம் செய்கிறது.
ஜீவன் சங்கம் திட்டம் ஜூன் 1–ந்தேதி வரை 90 நாட்கள் மட்டுமே நடைமுறையில் இருக்கும். 6 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். பாலிசி காலம் 12 வருடங்கள் ஆகும். ஒருமுறை பணம் கட்டினால் போதும்(வயதுக்கு தகுந்தாற் போல் பாலிசி தொகை வேறுபடும்). ஜீவன் சங்கத்தின் குறைந்தபட்ச முதிர்வு தொகை ரூ.75 ஆயிரம் ஆகும்.
வயது வரம்பு
குழந்தைகளுக்கு என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பாலிசி திட்டத்துக்கு வயது வரம்பு 0 முதல் 12 வயது ஆகும்(வயதுக்கு தகுந்தாற் போல் பாலிசி தொகை வேறுபடும்). பாலிசி காலம் 25 வருடங்கள். குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.1 லட்சம் ஆகும். குழந்தை வளர்ந்து 18, 20 மற்றும் 22 வயதுகள் அடையும் போது காப்பீட்டு தொகையில் இருந்து 20 சதவீதம் வழங்கப்படும். முதிர்வு காலத்தில் காப்பீட்டு தொகையின் 40 சதவீதம் மற்றும் போனஸ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது எல்.ஐ.சி. தென் மண்டல மேலாளர் (மார்க்கெட்டிங்) ரவிச்சந்திரன், மண்டல மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேசன்) எஸ்.ஜான்சன் ஆகியோர் உடனிருந்தனர்.