ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டும் காஷ்மீர் இளைஞர்கள்

காஷ்மீரில் ஏராளமான இளைஞர்கள் ராணுவத்தில் ஆர்வத்துடன் சேர்ந்து வருவது, சாதகமான மாற்றம்,” என, சினார் ராணுவ படை லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரதா சாஹா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் ராணுவ படை பிரிவில், தேர்வு செய்யப்பட்ட வீரர்களின்
அணுவகுப்பை பார்வையிட்ட பின், சாஹா பேசியதாவது: கடந்த ஆண்டு, ஜூலை - டிச., வரை, 700க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ராணுவத்தில் சேர்ந்துள்ளனர். இளைஞர்களின் ஆர்வம், ஊக்கமளிக்கிறது. அண்மையில், 1,301 காலியிடங்களுக்கு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுபோன்ற அணிவகுப்பு, எங்களுக்கும் உத்வேகத்தை அளிக்கிறது. ராணுவத்தில் நாட்டை காக்கும் பணியில், இளைஞர்களை அனுப்புவதில், பெற்றோரின் பங்கும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. ராணுவத்தில் மேலும் அதிகமானோர் சேர முன்வர வேண்டும். தேசத்தை காப்பதில், இளைஞர்களின் பங்கு, மிக முக்கியமானது. இவ்வாறு, அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...