தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக புதன்கிழமை 99.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் ஆகிய இடங்களில் தலா 40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
தர்மபுரி மாவட்டம், ஒக்கேனக்கலில் 30 மி.மீட்டரும், மேட்டுப்பாளையம், ஓமலூர், காவேரிப்பாக்கம், வாலஜா, கொடைக்கானல், பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் தலா 20 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த சில நாள்களாக, தென் மாவட்டங்களில் கோடைக்கு முன்னரே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் 99.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
திருச்சியில் 98.7, மதுரையில் 97.5, சேலத்தில் 96, வேலூர், சென்னையில் தலா 92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் 90.6, நாகையில் 90, தொண்டியில் 89.7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது என்றார் அவர்.