சென்னைப் பல்கலை: தொலைநிலை இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகத்தின், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதத்தில் இளங்கலையில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில்
வெளியிட்டுள்ளன.

ஏ12, ஏ13, சி12, சி13, சி14 ஆகிய தேர்வு பதிவு எண்களைக் கொண்ட மாணவர்கள் தேர்வு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும். மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லாத மாணவர்கள், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.

மறுமதிப்பீடு, மறு கூட்டலுக்கு ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய மார்ச் 11 கடைசித் தேதி என சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

w‌w‌w.‌u‌n‌o‌m.ac.‌i‌n,​​ ‌w‌w‌w.‌i‌d‌e‌u‌n‌o‌m.ac.‌i‌n என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...