வாக்காளர்களுக்கான தகவல்களோடு ஒவ்வொருவரும் தங்கள் ஆதார் எண்களை பதிவு செய்யும் திட்டம் தொடக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.இதுகுறித்து நிருபர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:–
திட்டத்தின் நோக்கம்
தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி அதிலுள்ள
தகவல்களை உறுதிப்படுத்தும் திட்டத்தை 3–ந் தேதி முதல் (நேற்று) இந்திய தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.100 சதவீதம் பிழையற்ற வாக்காளர் பட்டியலை தயாரித்து, தேவையற்ற குற்றச்சாட்டுகளை தவிர்த்து, நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.
ஆதார் எண் இணைப்பு
பெயர், முகவரி போன்ற விவரங்களை திருத்திக்கொள்வது, வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தால் அவர்கள் தானாக முன்வந்து அதை திருத்திக்கொள்வது, இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதை தவிர்ப்பது, புகைப்படங்களை சரிப்படுத்திக்கொள்வது,
ஆதார் எண்ணை வாக்காளர் தகவல்களுடன் இணைப்பது, செல்போன், தொலைபேசி எண்கள், இ–மெயில் முகவரி ஆகியவற்றை கொடுப்பது போன்றவற்றால், இந்திய தேர்தல் கமிஷனின் நோக்கம் எளிதாக நிறைவேறும்.
சிறப்பு முகாம்கள்
இந்தத் திட்டத்தை மே 31–ந் தேதிக்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 5 கோடியே 50 லட்சம் வாக்காளர்களிடம் இருந்தும் அதற்குள் அனைத்து தகவல்களையும் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஏப்ரல், மே மாதங்களில் முகாம்கள் நடத்தப்படுகிறது.
ஏப்ரல் 12, 26–ந் தேதிகளிலும் மே 10 மற்றும் 24–ந் தேதிகளிலும் வாக்குச்சாவடி அளவில் முகாம்கள் நடத்தப்படும். எனவே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள், ஆதார் எண்ணை இணைத்தல், போன் எண், இ–மெயில் முகவரி அளித்தல் போன்ற பணிகளை, முகாம்கள் நடக்கும் நாட்களில் அனைத்து வாக்காளர்களும் செய்யவேண்டும். இங்கு அதற்கான விண்ணப்பங்கள் தனித்தனியாக அளிக்கப்படும். அவற்றை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
பட்டியலில் வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்தாலோ, குடும்பத்தில் யாராவது இறந்தாலோ, முகவரி மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலோ அந்த விவரங்களை ஆதாரங்களுடன் சிறப்பு முகாமில் தாக்கல் செய்ய வேண்டும்.
வேறு பல வசதிகள்
சிறப்பு முகாம்கள் மட்டுமல்லாமல், இந்த பணிகளை மேற்கொள்ள வேறு பல வசதிகளையும் நாங்கள் செய்துகொடுத்துள்ளோம். அதன்படி, ஒவ்வொரு திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாநகராட்சி அலுவலகங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் அல்லது உதவி அலுவலரிடம் விண்ணப்பித்து சரி செய்துகொள்ளலாம்.
அங்குள்ள பொது சேவை மையம் போன்ற வாக்காளர் மையம் ஆகியவற்றிலும் படிவங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், இன்றிலிருந்து 51969 என்ற எண்ணுக்கு பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி போன்ற விவரங்களோடு எஸ்.எம்.எஸ். கொடுக்கலாம்.
15 நாட்களுக்குள் முடிவு
தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் படிவங்களை சமர்ப்பிக்கலாம். இ–மெயில் மூலமாகவும் தேவையான விவரங்களை அனுப்பலாம். 1950 என்ற பொதுவான இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு அதில் பெயர், ஆதார் எண் விவரங்களை கூறலாம். (மாவட்ட அளவில் 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்).
அதுமட்டுமல்லாமல், செல்போனில் பதிவிறக்கம் செய்வதற்கான தனி அப்ளிகேஷன் ஒன்றை தயாரித்து வருகிறோம். அது கிடைக்கப்பெற்றவுடன் அதன் மூலமாகவும் விவரங்களை சமர்ப்பிக்கலாம்.
வாக்காளர் தாக்கல் செய்யும் விவரங்கள், படிவங்களை சரிபார்ப்பதற்காக வீடுகளுக்கு அதிகாரிகள் வருவார்கள். புதிய தகவல்களை சேர்ப்பது, விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் இறுதி செய்யப்படும்.
வாக்களிக்கலாம்
ஆதார் எண் கொடுத்தால்தான் வாக்களிக்க முடியும் என்ற தகவல் தவறானது. ஆதார் எண் இதுவரை பெறாதவர்கள் அதற்காக நடத்தப்படும் முகாம்களுக்கு சென்று எண்களை பெற்றுக்கொள்ளுங்கள். அதை வாக்காளர் தகவலுடன் ஏதாவது ஒரு வகையில் இணையுங்கள்.
தமிழகத்தில் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவிலும், விழிப்புணர்வு குழுக்கள் ஏற்படுத்தப்படும். இதில் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள், கல்வித்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் சார்பற்ற தன்னார்வ தொண்டர்கள் இடம்பெறுவர்.
சட்டப்படி குற்றம்
வெவ்வேறு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திருப்பது, ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்திருப்பது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 17, 18–ம் பிரிவுகளின்படி குற்றமாகும். அதுபோல இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதும் குற்றம். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி குற்றத்தை தவிர்க்க வேண்டும்.
இதற்கு மக்கள் ஒத்துழைத்தால் எதிர்காலத்தில் தவறில்லாத நேர்மையான தேர்தலை நடத்த முடியும். அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை மிக எளிதாக செய்துகொள்ளலாம்.
ஒருங்கிணைப்பு திட்டம்
மக்களிடம் இருக்கும் ரேஷன் அட்டை, கல்வி உதவித்தொகை அட்டை, மானிய உதவி அட்டை போன்ற தனியாக இருக்கும் அனைத்து வகை அடையாள அட்டையையும் ஆதார் மூலம் ஒருங்கிணைக்கும் மாபெரும் திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இதற்காக மாநில தரவு தகவல் மையம் ஏற்படுத்தப்படவுள்ளது.
வாக்குச்சாவடி எல்லை
மேலும், வாக்குச்சாவடி எல்லைகளை சீரமைக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளோம். இதற்காக திருவள்ளுவர் மாவட்டத்தை மாதிரி மாவட்டமாக எடுத்துள்ளோம். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
சாட்டிலைட் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் ஆராய்ந்து, அதின் எல்லைகளை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறைவதோடு, வாக்காளர்கள் அதிக தூரம் பயணித்து வாக்குச்சாவடிக்கு வருவது தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.