தேர்வு தேதியை மாற்ற வேண்டும் !!

தமிழக அரசு 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுதேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10 வரை நடைபெறுகிறது. இதில், மார்ச் 24ம் தேதி தமிழ் இரண்டாம் தாள் தேர்வும், 25ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 26ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள் தேர்வும்
நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற தேர்வுகளுக்கு 6 முதல் 4 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆங்கில தேர்வுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
இதனால், கிராமப்புற, அரசு பள்ளி மாணவர்கள் கூடுதல் மன அழுத்தத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ் 2ம் தாள் மற்றும் ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளுக்கிடையே விடுமுறை அளிக்க வேண்டும். ஆகவே, தமிழக பள்ளிக்கல்விதுறை மற்றும் அரசு தேர்வுத்துறை பொருத்தமான தேர்வு காலஅட்டவணையை மாற்றி தேர்வினை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...