தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு!

தென் தமிழகத்தில் ஆங்காங்கே ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:


சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

திருசெந்தூரில் 20 மி.மீ, கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் 10 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில், தென், வட உள் தமிழகத்தில் ஆங்காங்கே பலத்த மழை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய இடங்களில் பலத்த மழையும், பிற இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகரின் குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை முறையே 91, 75 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் நிலவும். தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக சேலத்தில் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என்றார் அவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...