சாலை மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற பட்டதாரிகள் 200 பேர் கைது

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் பணி நியமனம், வேலைக்காக காத்திருக்கும் பார்வையற்ற பட்டதாரிகளுக்கான நிவாரணத் தொகையை ரூ.1000 உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் 5 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.


இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பார்வையற்றோர் கல்லூரி, மாணவர்கள் பட்டதாரிகள் சங்க நிர்வாகி சரஸ்வதி கூறும்போது, “எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ராயப்பேட்டை மருத்துவமனையில் 7 பேர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களின் கோரிக்கைளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம். போலீஸார் எங்கள் மீது நேற்று நடத்திய தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்’’

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...