சைனிக் பள்ளி முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த பெற்றோர் திட்டம்

உடுமலை சைனிக் பள்ளி பிளஸ் 1 வகுப்பில் டிசி வழங்கப்பட்ட 28 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, பெற்றோர் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில், பிளஸ் 1 தேர்வில் தோல்விடைந்த 28 மாணவர்களை, மாற்றுச் சான்றிதழ் (டிசி) பெற்றுக்கொள்ளுமாறு, பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியது. மாணவர்களின் பெற்றோர் உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோரை கோட்டாட்சியர் அழைத்து பேசினார். மறுதேர்வு நடத்தி, மீண்டும் பள்ளியில் சேர்க்க பெற்றோர் விடுத்த கோரிக்கையை பள்ளி நிர்வாகம் ஏற்க மறுத்தது. கோட்டாட்சியர் சாதனைக்குறள் கூறுகையில், "பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் மற்றும் நீக்கப்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் கூட்டம், நாளை (இன்று) நடக்கிறது. கூட்டத்துக்குப் பின், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

பெற்றோர் சிலர் கூறுகையில், "ஏப்., 1ல் பள்ளியின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசில் அனுமதி கேட்டுள்ளோம்" என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...