பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு நல்லொழுக்கக் கல்வியை கற்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் எஸ்.ராமதாஸ் வலியுறுத்தினார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த வடவாடி கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சனிக்கிழமை நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது:
கல்வி தொடர்புடைய எனது கனவு நிறைவேறி வருகிறது. குழந்தைகளுக்கு தரமானக் கல்வி, கட்டாயக் கல்வி, கட்டணமில்லாத கல்வி, சுமையில்லாத கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி கிடைக்க வேண்டும்.
பணக்கார, நடுத்தர, ஏழை என வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் சமத்துவமான ஒரே கல்வியை அரசே அளிக்க வேண்டும். அப்போதுதான் சமநிலையான, சமூகநீதியான சமுதாயத்தை உருவாக்க முடியும்.
பட்டம் பெறும் நீங்கள் அடுத்து மேல் படிப்புகள் படிக்க வேண்டும். ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். எல்லாம் முடித்த பிறகு வேலை என்று கேட்பீர்கள். இதற்கு நான் பதில் சொல்ல முடியாது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 94 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும்.
தீவிரவாதம், வன்முறை போன்றவற்றில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு காரணம் மதுவும், வேலை வாய்ப்பின்மையும்தான். இதனை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும். முன்பு இருந்ததைப் போல பள்ளி, கல்லூரிகளில் நல்லொழுக்கக் கல்வியை போதிக்க வேண்டும் என்றார்.