அரசின் முதல் பொது பட்ஜெட்டை நேற்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, வருமான வரி விலக்கு வரம்பு உயரும் என்பதில் பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அதுபோல, சேவை வரியை கடுமையாக உயர்த்தியுள்ளதால் பல பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கு மேல் எந்த பொருள் வாங்கினாலும் பான் கார்டு கட்டாயம் என்பது நல்ல நடைமுறை என்றாலும்,
வீடு வாங்கும் போது அட்வான்ஸ் தொகையில் ரொக்கத்துக்கு தடை விதித்து இருப்பது பலரின் சொந்த வீட்டு கனவை தகர்க்கும். மொத்தத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரிச்சலுகை அளித்து, 23 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரிச்சுமையை தந்துள்ளது ஜெட்லியின் பட்ஜெட். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையுடன் கடந்த 23ம் தேதி தொடங்கியது. ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கடந்த 26ம் தேதி தாக்கல் செய்தார். பயணிகள் கட்டணம் உயர்வு இல்லாத, புதிய ரயில்கள் இல்லாத, ஏற்கனவே இருக்கும் திட்டங்கள், வசதிகளை மேம்படுத்தும் வகையில் 5 ஆண்டு திட்டங்களுடன் ஹைடெக் தொலை நோக்கு பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.
2015-16ம் நிதியாண்டுக்கான மோடி அரசின் முதல் முழு பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று காலை தாக்கல் செய்தார். சிறிது நேரம் நின்றபடி பட்ஜெட் வாசித்த அருண் ஜெட்லி, முதுகுவலி பிரச்னை இருப்பதால் அமர்ந்தபடியே பட்ஜெட் வாசித்தார். அவரின் பட்ஜெட் உரை: நாட்டின் பொருளாதாரம் தற்போது மேம்பட்டுள்ளது. 2015-16ம் ஆண்டில் 8 முதல் 8.5 சதவீத வளர்ச்சி எட்டப்படும். இரட்டை இலக்கு வளர்ச்சி விரைவில் சாத்திய மாகும். பொருளாதார வளர்ச் சியை மேம்படுத்த, மாநிலங்களுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும். நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்துக்குள், அதாவது 2022ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்த வீடு என்ற நிலையை உறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உணவு, பெட்ரோலியம், உரம் உட்பட முக்கிய மானியங்களுக்காக வரும் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.2.27 லட்சம் கோடி செலவு செய்யும். வேளாண் உற்பத்தி மற்றும் வருவாயை பெருக்கும் விதத்தில், அத்துறைக்கு ரூ.8.5 லட்சம் கோடி கடன் அளிக்கப்படும். ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு 2 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை கூடுதல் வரி விதித்து ரூ.9 ஆயிரம் கோடி திரட்டப்படும்.
தங்க இறக்குமதியை குறைக்கும் வகையில், அரசே தங்க நாணயம் மற்றும் தங்க பத்திர திட்டங்களை விற்க திட்டமிட்டுள்ளது. சேவை வரியை 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும். முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கார்பரேட் நிறுவனங்களுக்கான வரியை அடுத்த 4 ஆண்டுகளுக்கு 25 சதவீதமாக குறைக்கப்படும். கறுப்பு பணம் பதுக்கினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும். க்ஷீ1 லட்சத்துக்கு மேல் பொருட்கள் வாங்கினால் பான் எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும். கறுப்பு பணத்தை ஒழிக்க டெபிட் மற்றும் கிரடிட் கார்டு பயன்பாடு ஊக்குவிக்கப்படும். ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அசாம், தமிழ்நாடு மற்றும் இமாச்சலப் பிரதேத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும். இதுபோல் பல அறிவிப்புகளை அவர் பட்ஜெட்டில் அறிவித்தார். சேவை வரியை உயர்த்தியன் மூலம் அனைத்து பொருட்களின் விலையும் உயரும். ஓட்டல், சினிமா அரங்கு மற்றும் ஜிம் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. வருமான வரி செலுத்தும் நடுத்தர மக்களுக்கு ரூ.4.44 லட்சம் மதிப்பில் அவர் வருமான வரி விலக்கு சலுகை அளித்துள்ளார்.
ஆனால் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்படவில்லை. இது நடுத்தர வர்க்கத்தினருக்கு திருப்தியாக இல்லை. இளைஞர்கள் மற்றும் முதியோர்களுக்கு எளிமையான காப்பீடு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. டெபிட் கார்டு, கிரடிட் கார்டு பயன்பாடு ஊக்குவிப்பு மூலம் ஒழுங்கான பண பரிமாற்ற முறைமைக்கு பட்ஜெட்டில் வழி செய்யப்பட்டுள்ளது. கறுப்பு பண பரிமாற்றத்தை ஒழிக்கும் நோக்கில் வீடு வாங்க அட்வான்ஸ் கூட ரொக்கமாக செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.23 ஆயிரம் கோடிக்கு புது வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா திட்ட செலவுகளுக்கும் சேர்த்து வரி விதிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி டெபாசிட்டுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. நேரடி வரி விதிப்பு முறையில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகையால் ரூ.8,355 கோடி இழப்பு ஏற்பட்டாலும், மறைமுக வரிகள் மூலம் அரசுக்கு ரூ.23,383 கோடி வருவாய் கிடைக்கும். மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டை அவர் நேற்று மாநிலங்களவையிலும் தாக்கல் செய்தார்.
* கறுப்பு பணம் பதுக்கினால் 10 ஆண்டு ஜெயில்
* சேவை வரி கடும் அதிகரிப்பு விலைவாசி உயரும் அபாயம்
* தூய்மை இந்தியா வரி அதிரடியாக அமல்
* ரூ.1 லட்சம் பொருள் வாங்கினால் பான் கார்டு கட்டாயம்
* கூட்டுறவு வங்கி டெபாசிட் கூட வரி பிடியில் தப்பவில்லை
* ஜிம் கட்டணம் உயரும் : யோகாவுக்கு வரிச்சலுகை
* வீடு வாங்க அட்வான்ஸ் இனி ரொக்கமாக தர தடை
* எல்லாருக்கும் வீடு 7 ஆண்டுகளில் கிடைக்கும்
* இளைஞர், முதியோருக்கு புதிய காப்பீடு திட்டம்
* தமிழகத்துக்கு எய்ம்ஸ் : கூடங்குளத்தில் கூடுதல் மின்சாரம்
* விவசாயிகள் பயன்பெற ரூ.8.5 லட்சம் கோடி கடன்
* ரூ.8,000 கோடிக்கு வரிச்சலுகை : ரூ.23,000 கோடிக்கு புது வரிகள்