அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 154 ஆய்வக உதவியாளர் பதவிகளுக்கு...

விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி, உயர்நிலை, மேல்நிலை ஆகிய அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 154 ஆய்வக உதவியாளர் பதவிகளுக்கு, நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பணிக்கு சம்பளம் ரூ.17,000. ஆதி திராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினர், அனைத்து வகுப்பு ஆதரவற்ற விதவைகள் 18 முதல் 35 வயதும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் 18 வயது முதல் 32 வயது , ஏனையோர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு சலுகை விதிமுறைபடி வழங்கப்படும்.
ஆதி திராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்( முஸ்லிம்கள்), அனைத்து வகுப்பு ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிக கல்வி தகுதி பெற்றிருப்பின் அவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.
கல்வி தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று, மேல்நிலை கல்வி, கல்லூரியில் சேர்வதற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும். அரசு தேர்வு சேவை மையங்களான விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.வி., பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் பள்ளி, ராஜபாளையம் பி.ஏ.சி.எம். ஆண்கள் பள்ளிகளில் ஆண்களும், விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலை பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.வி பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் பள்ளி, ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர். பெண்கள் பள்ளிகளில் பெண்களும் விண்ணப்பங்களை www.tndge.in. என்ற இணையதளத்தில் பதியலாம்.
தேர்வுகள் மே31 காலை 10 முதல் 12.30 மணி வரை நடக்கும். தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன் இணையதளத்தில் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பங்களை ஏப்.24 முதல் மே 6ம் தேதி மாலை மணி வரை அனுப்பலாம். இத்தகவலை முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...