தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு ...

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்விநிறுவன பட்டப் படிப்பு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:
தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், தொழில் படிப்புகளுக்கான 2015 மே மாத தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 20 கடைசித் தேதி என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேர்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள்  www.ide.unom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...