பிளஸ் 2 தேர்வு முடிவுமே 7ல் வெளியாகிறது?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள் எழுதினர். மார்ச், 5ல் துவங்கிய தேர்வு, 31ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம், மார்ச், 16ல் துவங்கி, நாளையுடன்
முடிகிறது. தற்போது மதிப்பெண் சரிபார்ப்பு, விடை திருத்து மையப் பட்டியல் படி, மதிப்பெண் சி.டி., தயாரிப்பு போன்ற பணிகள் நடக்கின்றன. 22ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி துவங்க உள்ளது.


இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:விடைத்தாள் திருத்தும் பணியை, ஏப்ரல், 17ல் முடிக்க திட்டமிட்டோம். சில நாட்கள் நீட்டித்து விட்டது. வரும், 22ம் தேதி முதல், மதிப்பெண் பட்டியல் தயாரிப்புப் பணி துவங்கும். இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகமாவதால், அதன் தயாரிப்புப் பணி அடிப்படையில், 'ரிசல்ட்' வெளியாகும் தேதி முடிவாகும்.எப்படியும், மே, 4ம் தேதி முதல் 7ம் தேதிக்குள், 'ரிசல்ட்' வெளியாகலாம். பெரும்பாலும், மே, 7ம் தேதியே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...