கணக்கு வைத்திருக்கும் வங்கி மட்டுமின்றி எந்த வங்கி ஏடிஎம்மிலும் டெபாசிட்

ஏடிஎம் இயந்திரங்களில் பணம் டெபாசிட் செய்யும் வசதிஉள்ளது. பெரும்பாலான வங்கிகள் இந்த வசதியை அறிமுகப்படுத்தி விட்டன.இருப்பினும், எண்ணிக்கையில் இவை   குறைவு. இதனால், பணம் டெபாசிட்செய்ய வங்கிக்கு செல்லவேண்டிய அவசியம்   இன்னமும்

உள்ளது.  பணத்தை டெபிட்கார்டு பயன்படுத்தி எந்த வங்கி ஏடிஎம்மிலும்எடுக்கலாம்.
ஆனால், டெபாசிட் செய்வது கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்கள் மூலமாகமட்டுமே மேற்கொள்ள இயலும். இந்த நிலையை போக்கி, அனைத்து வங்கிஏடிஎம் மூலமாகவும் பணம் டெபாசிட் செய்யும் வசதியை கொண்டுவர ரிசர்வ்வங்கி திட்டமிட்டுள்ளது. நேஷனல் பைனான்ஸ் சுவிட்ச் (என்எப்எஸ்) மூலம்அனைத்து வங்கிகளின் பணம் டெபாசிட் இயந்திரங்களையும் ஒருங்கிணைத்துஇதை சாத்தியமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி துணைகவர்னர் எச்.ஆர்.கான் கூறுகையில், ‘‘தேசிய பண பட்டுவாடா நிறுவனம்(என்பிசிஐ), நேஷனல் பைனான்ஸ் சுவிட்ச் (என்எப்எஸ்) என்ற திட்டத்தைசெயல்படுத்துவது பற்றி பரிந்துரை செய்துள்ளது. அதாவது, என்எப்எஸ் உடன்அனைத்து வங்கிகளையும் இணைக்கும் பட்சத்தில் இதை செயல்படுத்தமுடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.

இதன்மூலம் எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும், மற்றொருவங்கியின் பணம் டெபாசிட் செய்யும் ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் தனது வங்கிகணக்கில் பணம் டெபாசிட் செய்ய முடியும்’’ என்றார். பிற வங்கி ஏடிஎம்மில்பணம் எடுக்கும்போது அந்த வங்கிக்கு, வாடிக்கையாளர் கணக்குவைத்திருக்கும் வங்கி கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதே இதற்கு காரணம்.இந்த கட்டணம் குறைக்கப்படுமா என்று கேட்டதற்கு எச்.ஆர்.கான்கூறுகையில், ‘‘ஒரு தொழில்நுட்பம் அல்லது திட்டத்தைசெயல்படுத்தும்போதுஅதற்கான செலவை மீட்காவிட்டால், மாற்று வழியை அல்லது வசதியைஅளிக்க முடியாமல் போய்விடும்’’ என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...