வரும் 20ம் தேதி 10 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், வரும் 20ம் தேதி துவங்குகிறது.

குழப்பமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், மாணவ, மாணவியர் உள்ளனர். பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, நாளையுடன்
பெரும்பாலான இடங்களில் முடிகிறது. 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், வரும் 20ம் தேதி துவங்குகிறது.

வரும் 27ம் தேதிக்கு முன், திருத்தும் பணியை முடிக்க தேர்வுத் துறை காலக்கெடு நிர்ணயித்துள்ளது. ஆனால், 30ம் தேதி வரை, திருத்தும் பணி நடக்கும் என்று தெரிகிறது. 10ம் வகுப்பு, ஆங்கிலம் முதல் தாளில், ஐந்து மதிப்பெண்ணுக்கான முதல் கேள்வியில், இரண்டு மதிப்பெண்களுக்கு விடைகள், குழப்பமாக அமைந்ததாக புகார் எழுந்தது.

சமூக அறிவியல் தேர்வில், ஐந்து மதிப்பெண் மற்றும் பத்து மதிப்பெண்களுக்கான சில வரைபடங்களில், அச்சுக் கோளாறு இருந்ததாக புகார் எழுந்தது. எனவே, இந்த கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், மாணவ, மாணவியர் உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...