கல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான நெட் தகுதித்தேர்வு, ஜூன் 28ம் தேதி நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கியது.
பல்கலைகள், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர், பேராசிரியராக பணிபுரிய,
மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., வாரியம் சார்பில் நடத்தப்படும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும்.
இத்தேர்வு இந்த ஆண்டு, மொத்தம் 84 பாடப்பிரிவுக்கு, நாடு முழுவதும் 89 நகரங்களில் நடக்கிறது. கடந்த ஜூன் 28ம் தேதி, ஒரே நாளில், மூன்று தேர்வுகள் தலா 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகின்றன. முதல் தாள், காலை 9:30 - 10:45 மணி வரை; இரண்டாம் தாள், 11: 15 - 12:30 மணி வரை; மூன்றாம் தாள், 2:00 - 4:30 மணி வரையிலும் நடக்கிறது.
இத்தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கியது. மே 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மே 16ம் தேதிக்குள், தேர்வு கட்டணத்தை வங்கிகளில் செலுத்திவிட வேண்டும்.
தேர்வு விவரங்களை, http://cbsenet.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.