கிராமப்புற இணைய பயன்பாடு 28 கோடியாக உயரும்’

கிராமப்புறங்களில், இணையத்தின் பயன்பாடு, வரும், 2018ம் ஆண்டு, ஐந்து மடங்கு உயர்ந்து 28 கோடியாக அதிகரிக்கும் என, பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் (பி.சி.ஜி.,) தெரிவித்துள்ளது.

இது குறித்து, இக்குழுமம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்: இந்தியாவில், வரும், 2018ம் ஆண்டு, 55 கோடி மக்கள், இணையத்தை
பயன்படுத்துவர். அதில், 28 கோடி பேர், சிறிய நகரங்கள் மற்றும் சிற்றூர்களைச் சேர்ந்தவர்களாக இருப்பர். இவர்களின் எண்ணிக்கை, 2014ல், ஆறு கோடியாக இருந்தது.

இந்தியாவில், கணினியை விட, மொபைல் போன் மூலம் இணையத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கும் பொருந்தும். சிறிய நகரங்கள், சிற்றூர்களில், 70 சதவீதம் பேர், மொபைல் போன் மூலம், இணையத்தில் உலா வருகின்றனர். அவர்கள், வலைதளம் வழியாக பல்வேறு பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. பெண்கள், இணையத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், 2013ல், இணைய பயன்பாட்டில், 25 சதவீதமாக இருந்த பெண்களின் பங்களிப்பு, வரும், 2018ல், 33 சதவீதமாக உயரும். இந்தியாவில், 44 சதவீத குடும்பங்களின் நிர்வாகம் பெண்கள் கையில் உள்ளதால், இந்த வளர்ச்சி சாத்தியமாகும். 2014ல், 20 கோடி பேர் மொபைல் போனில், இணையத்தை அணுகினர். மக்களின் வருவாய்க்கு ஏற்ப, இணைய வழி இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...