தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று ஆதார் விவரம் பெறுவது மே 31 வரை தொடரும்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்...

வீடு வீடாகச் சென்று ஆதார் விவரங்களைப் பெறும் பணி மே 31 வரை தொடரும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.
புகைப்பட வாக்காளர் பட்டி யலில் வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் எண், இமெயில் முகவரி ஆகிய விவரங்களை சேர்க்கும் பணி நாடு முழுவதும் நடந்துவருகிறது. இதுபற்றி சந்தீப் சக்சேனா கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 64,099 வாக்குச்சாவடிகளில் கடந்த 12-ம் தேதி சிறப்பு முகாம் நடந்தது. இதில் 25 லட்சம் பேர் ஆதார் எண், செல்போன் எண், இமெயில் முகவரி ஆகிய விவரங்கள் இணைப்பு மற்றும் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகிய படிவங்களை அளித்துள்ளனர். ஆதார் அட்டை பெறாதவர்கள் அதற்கு விண்ணப்பித்தபோது பெற்ற இஐடி எண் அல்லது மக்கள்தொகை பதிவுக்கான ‘டின்’ எண்ணை அளித்துள்ளனர்.
இதுவரை, தமிழகம் முழுவதும் 2.41 கோடி வாக்காளர்களின் விவ ரங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 66.5 லட்சம் பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வீடுவீடாக சென்று ஆதார் விவரங்கள் பெறும் பணி மே 31 வரை தொடரும். குறிப்பிட்ட தினங்களில் சிறப்பு முகாமும் நடக்கும். அடுத்த சிறப்பு முகாம் வரும் 26-ம் தேதி நடக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...