நொந்து போன ஆசிரிய பயிற்றுனர்கள்...???

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் ஆசிரிய பயிற்றுனர்கள் இன்றைய நாளில் மிகவும் நொந்து கொண்டனர் என்று தான்
சொல்ல வேண்டும். இன்றைய சத்துணவு அமைப்பாளர்களின் போராட்டத்தில், பள்ளி குழந்தைகளின் மதிய உணவு கேள்விகுறியாகிப் போய்விடும் என்ற சிக்கலில் அனைத்து ஆசிரிய பயிற்றுனர்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவு என்னவெனில், தத்தம் மேற்பார்வைக்குரிய  பள்ளிகளில், பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதை உறுதி செய்யவும் மேலும் பள்ளியில் மேற்பார்வை செய்து இன்றைய குறிப்பு பதிவேட்டில் சத்துணவு வழங்கபடுவதனை பதிவு செய்யவும் உத்தரவு அளிக்கப்பட்டது. அதற்கு சில ஆசிரிய பயிற்றுனர்கள், கல்வி சம்மந்தபட்ட பணிகளை தவிர, யூனியன் அலுவக பணியாளர்கள் செய்ய வேண்டிய வேலையையும் நாங்கள் செய்ய வேண்டியதாக உள்ளது என  நொந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...