தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலைத்துறையில் நகல் கேட்டவருக்கு, 35 பக்கத்துக்கு, 700 ரூபாய் கட்டணம் செலுத்த அறிவுரை வழங்கப்பட்டதால் தகவல் கேட்ட விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.
பெரியநாயக்கன்பாளையம்
தோட்டக்கலைத்துறை பொது தகவல் அலுவலருக்கு, பிளிச்சி கோட்டைபாளையம் ரோடு, விவசாயி வேலுச்சாமி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மனு அனுப்பி இருந்தார். அதில், 'தோட்டக்கலைத்துறை வாயிலாக, தமிழக அரசு விவசாயிகளுக்கு என்னென்ன திட்டங்களை அறிவித்துள்ளது? பிளிச்சி கிராமத்தில் பயன் அடைந்த விவசாயிகள் பட்டியல் வேண்டும்' என கேட்டிருந்தார். மனுவுக்கு பதில் அனுப்பிய பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலைத்துறையினர், 'விவசாயிகள் பட்டியல் கடந்த 2008 முதல் 2013 வரை எடுக்கப்பட்டுள்ளது. பிளிச்சி கிராமத்தில் பயன் அடைந்த விவசாயிகளின் பட்டியல், 35 பக்கம் உள்ளது. அதன் நகல் பெற பக்கம் ஒன்றுக்கு, 20 ரூபாய் வீதம், 700 ரூபாயை கருவூல வங்கியில் செலுத்தி, அசல் ரசீது அலுவலகத்துக்கு கிடைக்கும் பட்சத்தில் ஆவணங்களின் பட்டியல் கிடைக்கும்' என, பதில் அனுப்பினர். இதை பார்த்த விவசாயி வேலுச்சாமி அதிர்ச்சி அடைந்தார்.
அவர் கூறுகையில், ''தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் நகல் பெற, ஒரு பக்கத்துக்கு, 2 ரூபாய் கட்டணம். நான் கேட்ட தகவல் தொடர்பான நகல்கள் பெற, 70 ரூபாய் செலுத்தினால் போதும். ஆனால், பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலைத்துறையினர், 2 ரூபாய்க்கு பதிலாக பக்கம் ஒன்றுக்கு, 20 ரூபாய் என மொத்தம், 700 ரூபாய் செலுத்த அறிவுரை வழங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.