விருதுநகர்மாவட்டத்தின் பல்வேறு பகுதி அரசு பள்ளிகளில் போதுமான குடிநீர், கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இதை மேம்படுத்த வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக உள்ளது.
பள்ளிகளில் கல்வி கற்க செல்லும் மாணவர்களுக்கு இன்றியமையாதது குடிநீர், கழிப்பறை. ஆனால்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துவக்க முதல் மேல்நிலை வரை அரசு பள்ளிகளில் இதற்கு போதுமான வசதியில்லை. இருந்தாலும் பராமரிக்கப்படுவதில்லை.
மாணவர்கள் வீடுகளில் இருந்து கொண்டுவந்த தண்ணீரையோ அல்லது பக்கத்து கடைகளுக்கு சென்று தண்ணீர் குடிக்கும் நிலையோ உள்ளது. பள்ளிகளில் சுத்தமான குடிநீர் இல்லாததே காரணம். கழிப்பறை வசதியும் பல பள்ளிகளில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பணியாளர்கள் மூலம் அவற்றை முறையாக சுத்தம் செய்யாததால் மாணவர்கள் அருகில் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். மாணவிகளின் பாடு திண்டாட்டம்தான். நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட அப்பகுதியில் உள்ள பல பள்ளிகளில் இதே நிலைதான் காணப்படுகிறது.
தண்ணீர் வசதியில்லை, நிதிப்பற்றாக்குறை போன்றவற்றை காரணங்களாக தலைமையாசிரியர்கள் கூறுகின்றனர். அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவற்றை அனைத்து பள்ளிகளிலும் செய்துதர வேண்டும் என ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், தொடக்க கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.
இவை ஒருபுறம் இருந்தாலும் அரசு பள்ளிகளில் இந்த வசதிகளை செய்து தருவது பள்ளிக்கல்வித்துறையின் கடமை. இவ்வசதிகளை ஏற்படுத்திதர வேண்டும். ஏற்கனவே குடிநீர், கழிப்பறை வசதிகள் இருந்தால் அதை மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர், சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
விருதுநகர் லட்சுமணன்: மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர், சுகாதார கழிப்பறை வசதியில்லை. இருக்கும் இடங்களிலும் அவை முறையாக பராமரிக்கப்படாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். அரசு, மாவட்ட நிர்வாகம் தேவையான நிதியை பள்ளிகளுக்கு வழங்கி இவ்வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை கல்வித்துறையினரும் கண்காணிக்க வேண்டும், என்றார்.