ஓசூரில் வாட்ஸ் அப்பில் பிளஸ் 2 கேள்வித்தாள் வெளியான
விவகாரத் தில் 8 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
கல்வித்துறையில் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு நிறைவடைந்தது. இதையடுத்து முறைகேடு நடந்த தேர்வறையில் அன்று தேர்வு எழுதிய மாணவர்களிடம், தேர்வறையில் ஆசிரியர்கள் செல்போனை உபயோகித்தனரா? தேர்வறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததா? அது செயல்பாட்டில் இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதேபோல் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் குறித்து விஜய் வித்யாலயா பள்ளியை சேர்ந்த மாணவர்களிடமும் போலீசார் ரகசிய விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.