ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ 57,053 கடன்

தமிழகத்தின் 201516ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.28,578 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், இது ரூ.31,829 கோடியாக உயர்ந்துள்ளது.  இதை சமாளிக்க ரூ.30,446 கோடி கடன் வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் நடப்பாண்டின்
இறுதியில் அரசின் நேரடி கடன் சுமை ரூ.2,11,483 கோடியாக  இருக்கும். மொத்த கடன் சுமை ரூ.4,12,500 கோடியாகவும் இருக்கும். இது ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட ரூ.5,000 கோடி அதிகம். நேரடி கடனுக்கான  வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.17,856 கோடி செலுத்த வேண்டும். தமிழக அரசு வாங்கி குவிக்கும் கடனுக்காக  தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும்  ரூ.57,053 கடன் சுமத்தப்பட்டுள்ளது. அதே ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அக்குடும்பத்தின் கடன் சுமை ரூ.2.85 லட்சமாக இருக்கும் என்று  கணக்கிடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...