தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
லட்சத்தீவு, உள் கர்நாடகத்தில் நிலவி வரும் மேல் அடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், திண்டுக்கல் மாவட்டம்- கொடைக்கானல், திருநெல்வேலி மாவட்டம்- செங்கோட்டையில் 50 மி.மீ. மழை பதிவானது. நீலகிரி மாவட்டம்- நடுவட்டத்தில் 40 மி.மீ, பாளையங்கோட்டை, குடவாசல், பென்னாகரம், உதகை ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ. மழை பதிவானது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவியது.
வானிலை அறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மாநகரைப் பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.