சத்துணவு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இதை முன்னிட்டு, பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமையாசிரியர்களையும், இதர ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்தி சத்துணவு மையத்தின் பொறுப்புகளைப் பெற்றிட மாவட்ட நிர்வாகங்கள் நிர்பந்திக்கின்றன.

அரசின் இந்த முடிவைக் கைவிட்டு, போராடும் சத்துணவு ஊழியர்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். ஆசிரியர்களுக்கும், சத்துணவு ஊழியர்களுக்கும் இடையே தேவையற்ற விரோத மனப்பான்மையை வளர்க்கும் ஊழியர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும். அவர்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் சத்துணவு வழங்குவதை மேற்பார்வையிட்டு வரும் நிலையில், சத்துணவு தயாரிக்கும் பணியைச் செய்திட நிர்பந்திக்கும் மாவட்ட நிர்வாகங்களை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளா

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...