அரசு துறைகளின் அலட்சியத்தால் ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் தாமதம்

நிதியாண்டின் துவக்கத்திலேயே தொடர்ந்து 5 நாட்கள் அரசு விடுமுறை வருவதை அறிந்தும் தமிழக அரசின் பல்வேறு துறைகள், ஊழியர்களின் சம்பள பட்டியல் விபரத்தை நிதி அமைச்சகத்திற்கு உரிய நேரத்தில் அனுப்பாததால், அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு
ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் ஒரு வார தாமதத்திற்கு பிறகே கிடைக்க வாய்ப்பு உள்ளது.



மார்ச் மாத சம்பளம் தாமதம் ஆவது குறித்து தமிழக அரசு ஊழியர் ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத சம்பள தொகை, நிதியாண்டின் இறுதி நாளுக்கு முன்பே ( மார்ச் 31ம் தேதிக்கு முன்பாகவே) வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விடும். இந்த ஆண்டு, நிதி ஆண்டு முடி ( மார்ச் 31) மற்றும் நித ஆண்டு துவக்கம் (ஏப்ரல் 1) ஆகிய நாட்களுடன் தொடர்ந்து மகாவீரர் ஜெயந்தி, புனித வெள்ளி, வார இறுதி நாட்கள் என தொடர்ந்து அரசு மற்றும் வங்கி விடுமுறை நாட்களாக உள்ளன. ஆனால் இது தெரிந்திருந்தும் மார்ச் மாத இறுதிக்கு முன்பே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க உரிய நடவடிக்கைகளை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

நிதித்துறை அமைச்சக அதிகாரியிடம் இது குறித்து கேட்ட போது, இது வரை எங்களிடம் அனுப்பப்பட்ட சம்பள பட்டியல்களை சரிபார்த்து அனுப்பி விட்டோம். அப்படி சரி பார்க்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு சம்பளம், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருக்கும். சில துறைகளில் இருந்து இன்னமும் சம்பள பட்டியல் அனுப்படவில்லை என தெரிவித்துள்ளார். இருப்பினும், எத்தனை துறைகள் ஊழியர்களின் சம்பள பட்டியலை அனுப்பவில்லை எனவும், எத்தனை பேருக்கு சம்பளம் தாமதம் ஆகும் எனவும் கூற அவர் மறுத்துவிட்டார்.

அரசு துறைகளின் இந்த தாமதத்தால் சிலருக்கு சனிக்கிழமையும் (ஏப்ரல் 4), பெரும்பாலான ஊழியர்களுக்கு திங்கள்கிழமையும் (ஏப்ரல் 6) சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏறக்குறைய 18 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கடன், வீட்டு வாடகை செலுத்தும் ஊழியர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...