சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தவிர்க்க, இளநீர், நுங்கு, பதனீர், தர்ப்பூசணி, கூழ் வகை, வெள்ளரி, சர்பத், பானகம், மோர் போன்றவற்றை சாப்பிடுகின்றனர். வெயில் நேரத்தில் குழந்தைகள், முதியவர்களை வெளியே தேவையின்றி அனுப்பக்கூடாது, உணவு முறைகளில் மிகவும் கவனம் தேவை என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பெரும்பாலும் வெயில் காலத்தில் பெரியம்மை, சின்னம்மை போன்ற நோய் குழந்தைகளை அதிகம் தாக்கும். இந்த வெப்பு நோய் பெரியவர்களையும் தாக்கக் கூடியது. சுத்தமில்லாத குடிநீரை குடித்தால் வயிற்றுபோக்கு,வாந்தி போன்ற கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். கோடையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதோடு, திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் என, சுகாதாரத்துறை சிபாரிசு செய்கிறது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை யில் அம்மை நோய், வயிற்றுபோக்கு அதிகம் தாக்கும். இதை தடுக்க, இளநீர், , உப்பு கரைசல், பழச்சாறு போன்ற குளிர்ச்சியான உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். சுத்தமில்லாத குடிநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். குழாய் கசிவில் இருந்து வரும் குடிநீர், கண்மாய், ஊரணி, குளத்து தண்ணீரை பயன்படுத்தக்கூடாது. எதுவாக இருந்தாலும் நன்கு காய்ச் சி குடிக்க வேண்டும். வயிறுகோளாறு உள்ளிட்ட பிரச்னைக்கு டாக்டர்களின் பரிந்துரையின்றி மாத்திரை, மருந்து வாங்குதலை தவிர்க்க வேண்டும். எதுவாக இருந்தாலும் அருகிலுள்ள டாக்டர்களை அணுகவேண்டும், என்றார்.