விண்கலம் பூமியை நோக்கி விழுகிறது

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா அனுப்பிய ஆளில்லா விண்கலம் தனது விண்வெளி கட்டுப்பாட்டு இழந்ததையடுத்து பூமியை நோக்கி விழுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை(ஐ.எஸ்.எஸ்.) பூமியில் இருந்து 400 கி.மீ. தொலைவில் அமைத்துள்ளன. இந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துச்செல்ல ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் சோயூஸ் எம்.27 எம் என்ற ஆளில்லா விண்கலத்தை நேற்றுவெற்றிகரமாக செலுத்தியது. குறிப்பிட்ட நேரத்திற்குள் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தைசென்றடையாமல் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும், அந்த விண்கலம் மீண்டும் பூமியை நோக்கி விழுவதாகவும் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

இந்த ஆளில்லா விண்கலத்தை பாதுகாப்புடன் கடலில் விழச் செய்யும் முயற்சியில் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் இறங்கியுள்ளது.

இது குறித்து சீனா சென்றுள்ள ரஷ்ய துணை பிரதமரும் , ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமை ஏஜென்சியுமான டிமெட்ரி ரோகோஸின் கூறுகையின், ஆளில்லா விண்கலம் பூமியை நோக்கி வருவது கவலையளிக்கிறது என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...