வேலூர் அருகே உள்ள தொடக்க பள்ளியில் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தலைமை ஆசிரியை தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்தனர். வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் துத்திகாடு
ஊராட்சியை சேர்ந்த தெள்ளை மலை கிராமத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் 50 மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கும்படி அப்பகுதிமக்கள் அணைக்கட்டு எம்எல்ஏ கலையரசுவிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனால் நேற்று முன்தினம் அந்த தொடக்கப்பள்ளியை எம்எல்ஏ ஆய்வு செய்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியை வேண்டாபாய் டிசம்பர் மாதம் முதலே பணிக்கு வருவது இல்லை என்று மற்றொரு ஆசிரியை கூறினார். இதனைதொடந்து நேற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுடன் எம்எல்ஏ கலையரசு அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிக்கு வந்த தலைமை ஆசிரியை வேண்டாபாயிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர் என்னை எதுவும் கேட்காதீர்கள், இப்போதே சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்துவிடுங்கள், இல்லையென்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அதிகாரிகள் இனி தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என எச்சரித்துவிட்டு சென்றனர்.