அரசு பொது இ சேவை மையங்களில் சான்றிதழ்கள்: தேர்வு முடிவுகளுக்கு முன்பே பெற்றுக் கொள்ளலாம்...!

தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ்களை அரசு பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறியிருப்பது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எல்காட் மூலமாகவும், 8 வட்ட அலுவலகங்கள், அந்தந்த கிராமங்களில் உள்ள 122 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், 62 புது வாழ்வு திட்ட அலுவலகங்களிலும் அரசு பொது இ சேவை மையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
தமிழக முதல்வாõன் உத்தரவுபடி 6-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சான்றிதழ்களைப் பெறாத மாணவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ்களை தங்களுக்கு அருகிலுள்ள அரசு பொது இ சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
ஏனெனில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த சான்றிதழ்களை பெற வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு பொது இ சேவை மையங்களுக்கு
மாணவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பதால் காலதாமதம் ஏற்படும் என்பதற்காக இந்த முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...