கால்நடை தீவனமாகும் குழந்தைகள் சத்துமாவு

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்து மாவு பாக்கெட்டுகளை, பணியாளர்கள் கால்நடைகளுக்கு தீவனமாக  விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் 10க்கும் மேற்பட்ட அங்கன்வாடி
மையங்கள்  உள்ளன. இங்கு 2 முதல் 5 வயது வரை அடிப்படை கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கீரை, பருப்பு, முட்டையுடன் தினமும் மதிய உணவு  வழங்கப்படுகிறது. மேலும் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை மூலம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதங்கள் முதல் 36  மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு சத்து மாவு (இணை உணவு) வழங்கப்பட்டு வருகிறது.

கருமாரிபுரம், பேரூராட்சி அலுவலக பகுதி, காலனி தெரு உள்ளிட்ட பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் உள்ள சத்துமாவு பாக்கெட்டுகளை  ஒரு சில பணியாளர்கள் ஆடு, மாடு வளர்ப்போருக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பயனாளிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்  தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு வழங்க வேண்டும். 2 கிலோ எடையுள்ள  சத்துமாவு பாக்கெட்டை தலா ரூ.50 வீதம், அங்கன்வாடி ஊழியர்கள் சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த மாவை தண்ணீரில் கலந்து ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொடுத்து வருகின்றனர். இந்த மாவை உண்ணும் பசுக்கள், அதிகளவில் பால்  தருவதாகவும் கூறுகின்றனர். இதற்காக அங்கன்வாடி மைய பணியாளர்களிடம் பணம் கொடுத்து இந்த பாக்கெட்டுகளை கால்நடை வளர்ப்போர்  விரும்பி வாங்குகின்றனர். இந்த முறைகேட்டை தடுக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...