பாக்கித் தொகையை தராவிட்டால் ஒரு மாணவனைக் கூட பள்ளிகளில் சேர்க்க மாட்டோம் என்று தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கம் தமிழக அரசை மிரட்டியுள்ளது.5 வயதான அனைத்துக் குழந்தைகளும், இலவசக் கல்வி பெறும் உரிமையைக் கட்டாயமாக்கி, கடந்த 2009-ஆம் ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் படி அரசுப் பள்ளிகளில் மட்டுமன்றி, தனியார் பள்ளிகளிலும் 25 சதவிகித இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கான கட்டணத்தை அரசே நேரடியாக தனியார் பள்ளிகளுக்கு வழங்கும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
மழைக்குக் கூட ஒதுங்க
முடியாத, மிகப்பெரிய பள்ளிகளில் தங்களின் பிள்ளைகள் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று மகிழ்ந் தார்கள்.ஆனால், இந்தச் சட்டம் தனி யார் பள்ளிகள் மத்தியில் கடும் கலக்கத்தை ஏற்படுத்தியது. நன்கொடை, கட்டட நிதி, நோட்டு, புத்தகம், யூனிபார்ம், ஆண்டு விழா என்று பலவாறாக கொள்ளை லாபம் பார்த்து வந்த அவர்கள், 25 சதவிகித இடங்கள் பறிபோகிறதே என்று வயிற்றில் அடித்துக் கொண்டனர்.இதனால் முதல் 2 ஆண்டுகளில் இந்த சட்டத்தை, தனியார் பள்ளிகள் கொஞ்சமும் மதிக்கவில்லை.
பின்னர் வேண்டா வெறுப்பாக ஓரிருவரை மட்டும், கட்டாயக் கல்விஉரிமைச் சட்டத்தின் கீழ் சேர்த்த னர். பல இடங்களில், இந்த ஏழை மாணவர்களை தனியே உட்கார வைப்பதும், எப்படியாவது அவர்களாகவே பள்ளியை விட்டுச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுமாக இருந்தனர்.இந்நிலையில், தற்போது புதிய கல்வியாண்டு துவங்கும் நிலையில், எப்படியாவது ஏழைக் குழந்தைகளை கழித்துக் கட்டிவிட வேண்டும் என்பதற்காக, பாக்கிப் பணத்தைத் தரவில்லை என்ற காரணத்தைக் கூறி, இலவச மற்றும்கட்டாய கல்வி உரிமைச் சட்டத் தையே நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.
தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு ரூ. 150 கோடி அளவிற்குகட்டணப் பாக்கி வைத்துள்ளதாக வும், ஜூன் 1-ம் தேதிக்குள் தராவிட் டால் பள்ளியில் ஒரு மாணவனை கூட சேர்க்கமாட்டோம் என்றும் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க செயலாளர் நந்தகுமார் அரசுக்கு மிரட்டல் விடுத் துள்ளார்.மேலும், சென்னையில் வியா ழனன்று நடைபெற்ற நர்சரி, பிரை மரி, மெட்ரிக் பள்ளிகளின் வெள்ளிவிழா மாநாட்டில், 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் உத்தரவையும், மாணவர்களை கண்டிக்கக் கூடாது என்ற உத்தரவை யும் ரத்து செய்ய வேண்டும் என்றும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு காரணம் இல்லாமல் அங்கீகாரத்தை நிறுத்தி வைக்கக் கூடாது; எவ்வித நிபந்தனையும், நிர்ப்பந்தமும் இல்லாமல் உடனடியாக தற்காலிக மற்றும் தொடர் அங்கீகாரத்தை வழங்க வேண்டும்; சி.பி.எஸ்.இ. பள் ளிகளுக்குப் போல அங்கீகாரத்தை ஆன்லைன் மூலம் வழங்கவேண்டும்; 3 ஆண்டு அங்கீகா ரத்தை 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...