MBBS & BDS படிப்புகளுக்கு மே 11 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு மே 11 முதல் மே 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை போன்று இந்தாண்டும் 500-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதற்காக 48,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு இருப்பதாகவும், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், ஒரு அரசு பல்
மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும் மருத்துக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் மே 29. விண்ணப்பங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...