சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கி.பழனிச்சாமி,
பொதுச் செயலாளர் சி.ராமநாதன் ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கடந்த 7 நாள்களாக வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை

நடத்தி வந்தனர். இந்த நிலையில், சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதியுடன் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சத்துணவு

ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...